நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - Agnipuratchi

நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகம் என்பவ ரின் மகள் பிரதீபா குறைவான மதிப்பெண் பெற்றிருந்தார். தனது மருத்துவக் கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அவர், நஞ்சு குடித்து தற்கொலைக்கு முயன் றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துமனை யில் சேர்க்கப்பட்ட மாணவி பிரதீபா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவி பிரதீபா பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் ஆயி ரத்து 165 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். நன்றாக படிக்கக்கூடிய இவர் மருத் துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வுக்கு தயாரானார். கடந்த முறை நீட் தேர்வு எழுதியபோது குறைந்த மதிப்பெண் பெற்றதால் இந்த முறை மீண்டும் முயற்சி செய்துள்ளார். ஆனால் போதிய பயிற்சி இல்லாத காரணத்தால் பிரதீபா தேர்ச்சி பெறவில்லை. கடந்தாண்டு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தியும் வெற்றிபெற முடியாததால் உயிரை மாய்த்துக் கொண்டார். தற்போது நீட் தேர்வு காரணமாக மேலும் ஒரு மாணவி உயிரிழந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages