நெகிழிப்பை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்குமாறு பா.ம.க இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். - Agnipuratchi

நெகிழிப்பை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்குமாறு பா.ம.க இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Share This

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுசூழல் நாள் கொண்டாடப்படுவதை சுட்டிக் காட்டியுள்ளார். ஐ.நா சார்பில் உலக சுற்றுசூழல் நாளை கொண்டாடும் முதன்மை நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  நெகிழிப்பை குப்பை அணுகுண்டுகளைவிட ஆபத்தானவை என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 12 நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு குப்பையில் தூக்கியெறியப்படும் நெகிழிப்பை, ஆயிரம் ஆண்டுகளுக்கு அழியாமல் இருந்து சுற்றுச்சூழலை கெடுக்கும் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். நெகிழிக் குப்பைகளால், கடல்வாழ் திமிங்கலங்கள், சீல்கள் மற்றும் பறவைகள் சாகின்றன என்றும், இவை சாக்கடையில் கலப்பதால் டெங்கு, மலேரியா என பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதாகவும், நெகிழிப்பை களால் ஆறுகள், குளங்கள், நிலத்தடி நீர் போன்ற அனைத்து நீர்வளங்களும் கடுமையாக மாசுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

நெகிழிக்குப்பையை எரிப்பதால் டையாக்சின் உள்ளிட்ட நச்சுவாயுக்கள் வெளியா வதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். புற்றுநோய், குழந்தையின்மை, ஈரல் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, இருதய நோய்களுக்கு குப்பை எரிப்பு காரணமாவதாக கூறியுள்ள அவர், குப்பைகளை கையாள அனைத்து விதிகளை யும் முறையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திடக்கழிவு, நெகிழிக்கழிவு, மின்னணுக்கழிவு, மருத்துவக்கழிவு என குப்பை மேலாண்மைக் கான விதிகள் 2006 ஆண்டில் வெளியிடப்பட்டும்,  மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் முறையாக செயல்படுத்த தவறிவிட்டதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் எல்லா நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மைக்கான பரப்புரை இயக்கத்தை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்து ஓராண்டாகியும், இன்னமும்கூட சட்டவிதிகள் வெற்றுக் காகிதமாகவே இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.  இதேபோன்று இந்த ஆண்டு சுற்றுச்சூழல் நாளில் தொடங்கும் நெகிழிப்பை ஒழிப்பு பரப்புரையும் வாய்ப்பேச்சாக முடிந்துவிடக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். திடக்கழிவு மேலாண்மை விதிகளையும் நெகிழிக்கழிவுகள் மேலாண்மை விதி களையும் தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களது பொருட்களால் உருவாகும் குப்பையை அவர்களே வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பவும் காசுகொடுத்து வாங்கிக் கொள்ளும் சட்டப்படியான கொள்கையை செயல்படுத்த வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப்பைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் தடை விதிக்க வேண்டும்,  நெகிழிப்பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை வாடிக்கை யாளர்களுக்கு வழங்கும் பழக்கத்துக்கு வணிக நிறுவனங்கள் மாற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடைகளுக்கு துணிப்பைகளை கொண்டு செல்வதன் மூலம் நெகிழிப்பை கலாச்சாரத்தை ஒழிக்க உலக சுற்றுசூழல் நாளில் உறுதியேற்குமாறு பொதுமக்களை அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages