1995 முதல் 1996 வரை இஸ்ரேல் நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சராக இருந்தர் கோனென் செகவ். இவர் ஈரான் உளவுத்துறையின் முகவராக நியமிக்கப் பட்டிருந்ததாக இஸ்ரேல் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நைஜீரியா வில் வசித்து வரும் செகவ் அடிக்கடி ஈரான் தூதரகம் மற்றும் ஈரான் நாட்டுக்கு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் உள்துறை பாதுகாப்பு அமைப்பான ஷின்பெட் கூறியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான தகவல்களை அவர் ஈரானுக்கு அளித்திருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே போதை மாத்திரைக் கடத்தலில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த செகவ், விடுதலையானதும் இஸ்ரேலில் இருந்து வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
பன்னாட்டுச் செய்திகள்
ஈரானுக்கு உளவு பார்த்ததாக இஸ்ரேல் முன்னாள் அமைச்சர் மீது அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரானுக்கு உளவு பார்த்ததாக இஸ்ரேல் முன்னாள் அமைச்சர் மீது அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
Share This
Tags
# பன்னாட்டுச் செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
பன்னாட்டுச் செய்திகள்
Labels:
பன்னாட்டுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment