ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும் சாந்தா கோச்சார் தன் மீதான புகார்கள் குறித்த விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்லவுள்ளார். - Agnipuratchi

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும் சாந்தா கோச்சார் தன் மீதான புகார்கள் குறித்த விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்லவுள்ளார்.

Share This

கடன் சுமையில் சிக்கியுள்ள வீடியோகான் நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் சாந்தா கோச்சார் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த ஐசிஐசிஐ வங்கி முடிவு செய்துள்ளது இந்நிலையில் தன் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தி முடிக்கப்படும் வரை சாந்தா கோச்சார் விடுப்பில் சென்றுள்ளார். இடைக்காலத்தில் பொறுப்பை கவனிக்க, ஐசிஐசிஐ வங்கியின் காப்பீட்டு நிறுவன தலைமை செயலதிகாரி சந்தீப் பாக்சி, முழு நேர இயக்குநர் மற்றும் முதன்மை செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் சாந்தா கோச்சார் விடுப்பில் இருந்தாலும், அவர் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயலதிகாரி பொறுப்பில் நீடிப்பார் என பங்குச் சந்தைக்கு ஐசிஐசிஐ நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages