வால்பாறையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. - Agnipuratchi

வால்பாறையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Share This

கோவை மாவட்டம் வால்பாறை காஞ்சமலை தேயிலை தோட்டம் அருகே நேற்றிரவு சிறுத்தை தாக்கியதில் கைலாசுவாதி என்ற தொழிலாளி உயிரிழந்தார். உடல் கூறு ஆய்வுக்காக அவரது உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பார்க்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததாக கூறி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வால்பாறை பொள்ளாச்சி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, வால்பாறை பகுதியை புலிகள் காப்பகத்தில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் குடியிருப்பு பகுதியை சுற்றி மின் வேலி அமைக்க வேண்டும், கைலசாவதி குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages