தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை யார் நினைத்தாலும் இனிமேல் திறக்க முடியாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். - Agnipuratchi

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை யார் நினைத்தாலும் இனிமேல் திறக்க முடியாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

Share This

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும்  ஸ்டெர்லைட் ஆலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் சில கேள்விகளை எழுப்பினார். ஆலையை முடுவது தொடர்பாக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலைக்கான அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு, நிரந்தரமாக மூடி முத்திரையிடப்பட்டுள்ளதாக கூறினார். எனவே வருங்காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை யார் திறக்க நினைத்தாலும் முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆலையை மூடுவது தொடர்பான அரசாணை செல்லும் என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெறுவதாக கூறிய முதலமைச்சர், தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கான ஆதாரங்கள் அரசிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.  காவிரி ஆணைய விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages