பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற் கான அறிவிக்கை நடுவண் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், ஆணை யம் அமைக்கப்படாமல் தடுப்பதற்கான சதிகளை கர்நாடகம் தொடங்கியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ள நடுவண் நீர்வளத்துறை அமைச்சகம், அதில் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களை பரிந் துரைக்கும்படி தொடர்புடைய மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருப்பதையும் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே. பிர பாகரை பகுதிநேர உறுப்பினராக நியமிக்கும்படி பரிந்துரைத்துள்ளது. ஆனால், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இதுவரை தங்கள் பிரதிநிதி களின் பெயரை பரிந்துரைக்கவில்லை. அதனால் காவிரி மேலாண்மை ஆணைய த்தை அமைப்பதிலும், அதன் முதல் கூட்டத்தைக் கூட்டுவதிலும் தாமதம் ஏற்பட் டுள்ளது. இதில் நடுவணரசு செய்வதற்கு எதுவுமில்லை என்றும், தொடர்புடைய 4 மாநிலங்களும் பகுதிநேர உறுப்பினர்களை பரிந்துரை செய்தால் மட்டும்தான் ஆணையத்தை கூட்ட முடியும் என நடுவண் நீர்வளத்துறை கூறியுள்ளது. காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை கேரளமும், புதுச்சேரியும் சிறிய பங்குதாரர்கள். கர்நாடகமும், தமிழகமும்தான் முதன்மை பங்குதாரர்கள். அந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான பகுதி நேர உறுப்பினரின் பெயரை கர்நாடகம் உடனடியாக பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால், நடுவண் அரசிதழில் அறிவி க்கை வெளியிடப்பட்டு 4 நாட்களாகியும் பகுதி நேர உறுப்பினரின் பெயரை கர்நா டக அரசு பரிந்துரைக்காதது மேலாண்மை ஆணையத்தை முடக்கும் நோக்கம் கொண்டதாகும். கர்நாடகம் பகுதி நேர உறுப்பினரை நியமித்த பிறகே ஆணை யத்தை கூட்ட வேண்டும் என நடுவணரசு நினைத்தால், இப்போதைக்கு ஆணை யத்தைக் கூட்ட முடியாது. இது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட தன் நோக்கத்தையே சிதைத்து விடும். தென்மேற்கு பருவமழை காரணமாக கர் நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில், அதில் தமிழகத்திற் குரிய நியாயமான பங்கு கிடைக்காமல் தடுக்கவே இது உதவும். கர்நாடகத்தின் தீய எண்ணம் கொண்ட சதியை நடுவணரசு உணர்ந்து கொண்டு, அடுத்த சில நாட்களுக்குள் கர்நாடகம் அதன் பகுதிநேர உறுப்பினரை நியமிக்காவிட்டால், இரு க்கும் உறுப்பினர்களைக் கொண்டு காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும். காவிரி செயல்திட்டத்தின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தலைவரை யும் சேர்த்து மொத்தம் 9 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அவர்களில் மூன்றில் இரு பங்கு, அதாவது 6 பேர் இருந்தால் ஆணையத்தைக் கூட்ட முடியும். ஆணை யத்தின் தலைவர் உள்ளிட்ட 5 பேர் நடுவணரசால் நியமிக்கப்படும் நிலையில், தமிழகத்தின் பகுதி நேர உறுப்பினரையும் சேர்த்து ஆணையத்தின் கூட்டத்தை நடுவணரசு கூட்ட முடியும். நடப்பு நீர்ப்பாசன ஆண்டு தொடங்கி விட்ட நிலையில், கர்நாடக அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான ஆணையை, ஆணையம் பிறப்பி க்க வேண்டும். ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வசதியாக கேரள அரசும், புதுவை அரசும் அவற்றின் பிரதிநிதிகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment