தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு மாடுகளான காங்கேயம், உம்பளாச்சேரி, புலியங் குளம் உள்ளிட்டவற்றிற்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் காங்கேயத்தில் கார்த்திகேய சிவசேனாபதி என்பவர், கால்நடை ஆய்வு நடுவம் நடத்தி வருகிறார். அங்கு சென்ற மர்ம கும்பல், நடுவண் கால்நடைத்துறை அதிகாரிகள் எனக்கூறி காங்கேயம் மாடுகளின் ரத்த மாதிரிகளை பெற முயற்சித்துள்ளது. ஆனால் அவர்களிடம் எந்தவொரு அனுமதி படிவங்களும் இல்லாததால் விரட்டியடிக்கப்பட்டனர்.
நாட்டு மாடுகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து மரபணு மாற்று முறையில் புதிய கால்நடைகளை உருவாக்க வெளிநாட்டு அமைப்புகள் இதுபோன்ற சதிச்செயலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
No comments:
Post a Comment