நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதில் உயர்நீதிமன்ற ஆணையை தமிழக அரசு பின்பற்றத் தவறியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற ஆணையை பின்பற்றியிருந்தால் அனிதா உயிரிழந்திருக்கமாட்டார் என தெரிவித் தார். நீட் தேர்வுக்கு தயார்படுத்துவதில் தமிழக அரசு இந்த ஆண்டும் மெத்தன மாக செயல்பட்டதால்தான், தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக அவர் சாடினார். தற்கொலைக்குப் பின்னர் கண்ணீர் வடிப்பதும், கவலைப்படுவதும் தேவையற்றது என்றும் அவர் தெரிவித்தார். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, நீட் தேர்வு விவகாரத்தில் பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றார். மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் பதிலளிக்குமாறு கூறிய நீதிபதி, விசாரணையை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே நீட் தேர்வை இனி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடுத்தாது என்று கூறியுள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை, அடுத்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமையே தேர்வை நடத்தும் என அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment