அரசியலில் வழிகாட்டியாகத் திகழ்ந்த மூத்த தலைவர் அத்வானியை, பிரதமர் மோடி அவமானப்படுத்தி விட்டதாக காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். - Agnipuratchi

அரசியலில் வழிகாட்டியாகத் திகழ்ந்த மூத்த தலைவர் அத்வானியை, பிரதமர் மோடி அவமானப்படுத்தி விட்டதாக காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Share This

வாஜ்பாய், அத்வானி மற்றும் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பா.ஜ.க வில் அவமதிக்கப்பட்டு விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். தனிப்பட்ட மனித வாழ்க்கையில் குரு என்பவரை உயர்ந்த இடத்தில் வைத்து இந்துமதம் கொண்டா டுவதாக கூறிய அவர், பொதுக்கூட்டங்களிலோ, அரசு விழாக்களிலோ அத்வானியை பிரதமர் மோடி மதிக்கத்த தவறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மோடிக்கு அத்வானிதான் அரசியல் குருவாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும், அதற்கான மரியாதை வழங்கப்பட்டதா என்பதை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க. குடியரசுத் தலைவரையே பொம்மை யாக வைத்து தரம்தாழ்ந்த அரசியல் நடத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்று பதி லடி கொடுத்துள்ளது. பிரணாப் முகர்ஜியை பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக அறிவி க்க இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அத்வானிக்கு காங்கிரஸ் கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages