ஜாக்டோ- ஜயோ அமைப்பினர், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நடுவணரசு ஊழியர்களுக்கு இணை யாக ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதனை நிறைவேற்றக் கோரி சென்னை மற்றும் சில இடங்களில காலவரையற்ற உண்ணாநிலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அமைச்சர்களுக்கு இணையான ஊதியம் வழங்குமாறு அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் களை இதுவரை தமிழக அரசு அழைத்துப் பேசவில்லை. அவர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற எடப்பாடி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
No comments:
Post a Comment