கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டாத தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். - Agnipuratchi

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டாத தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Share This

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் திட்டம் தொடங்கப்படாததை கண்டித்து, விவசாயிகள் ஆற்றில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் செங்கற்களை ஏந்தியவாறு தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

தமிழக அரசு கதவணை கட்டும் பணியை தொடங்காவிட்டால், விவசாயிகள் அனைவரும் செங்கற்களை கொண்டுவந்து கதவணையை கட்டப்போவதாக அவர்கள் அறிவித்தனர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages