தஞ்சாவூரில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். - Agnipuratchi

தஞ்சாவூரில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Share This

தஞ்சாவூர் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டடப்பட்டது. விரிசல் ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாலத்தை திறக்கக்கூடாது என நீதிமன்றம் ஆணையிட்டது. இந்நிலையில், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்களை காவல்துறையினர் இழுத்து சென்று கைது செய்தனர்.

பள்ளிக்கு அருகில் உள்ள இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கினால் மாணவர்கள் விபத்துக்கு உள்ளாவார் என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், அவசர கதியில் திறக்கப்பட்ட பாலத்தை உடனடியாக மூடவேண்டும் என வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages