கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற இந்த ஆண்டு இறுதிவரை கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.  - Agnipuratchi

கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற இந்த ஆண்டு இறுதிவரை கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. 

Share This

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு இந்து சமய அறநிலையத் துறை ஆணையிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வணிகர்கள், கடைகளை அகற்ற கால அவகாசம் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்து வந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். 

அதில், கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலஅவகாசம் அளித்துள்ளனர். வணிகர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்குமாறும் நீதிபதிகள் ஆணையிட்டனர். மாற்று இடம் கோரி நான்கு வார காலத்துக்குள் தமிழக அரசிடம் வணிகர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவற்றை பரிசீலித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages