உயர்நீதிமன்றம் மற்றும் நீதிபதியை விமர்சித்த விவகாரம்- தங்க தமிழ் செல்வனுக்கு நோட்டீஸ் - Agnipuratchi

உயர்நீதிமன்றம் மற்றும் நீதிபதியை விமர்சித்த விவகாரம்- தங்க தமிழ் செல்வனுக்கு நோட்டீஸ்

Share This

உயர்நீதிமன்றத்தையும் தலைமை நீதிபதியையும் விமர்சித்தது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடுக்கக் கூடாது⁉ என 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தங்க தமிழ்ச் செல்வனுக்குத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு முன்னதாக, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் ஜூன் 14ஆம் நாள் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்⚖. இது தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன் தலைமை நீதிபதியையும், உயர்நீதிமன்றத்தையும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages