தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான சத்துமாவு, பருப்பு போன்றவற்றை வினியோகம் செய்யும் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களில் ரூ.1,000 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து கடந்த 5ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 76 இடங்களில் சோதனை நடத்தினார்கள். அதன்படி, ரூ.17 கோடி, 10 கிலோ தங்கம், ஏராளமான சொத்து ஆவணங்கள், 100 பென்டிரைவ்கள், ஒரு லேப்-டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், இதுவரை நடத்திய சோதனையில் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு-வருமான வரித்துறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment