பொன்னேரி அருகே அரிசி ஆலையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாதவரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அரிசி ஆலையில் இருந்து குட்கா பான்மசாலா பதுக்கிவைக்கப்பட்டு வடசென்னை, திருவள்ளூர் மாவட்ட புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர். திருவள்ளூர் மாவட்டம் வழுதுகைமெட்டில் அரிசி ஆலை என்ற பெயரில் தமிழக அரசின் இலவச அரிசியை பதுக்கிவைத்து ஆந்திராவுக்கு விற்பனை செய்துவருவதை அறிந்த போலீசார், விஜயகுமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் பெங்களூரில் இருந்து பான்மசாலா, குட்கா பொருட்களை கடத்தி வந்து சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விற்பனை செய்துவருவதாக கூறியதை அடுத்து பதுக்களில் ஈடுபட்ட பால்ராஜ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
அரிசி ஆலையில் 25 லட்சரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment