கருணாநிதி வீட்டுக்கு மருத்துவக் குழு வருகை - Agnipuratchi

கருணாநிதி வீட்டுக்கு மருத்துவக் குழு வருகை

Share This

கருணாநிதியின் உடல்நிலையைச் சோதனை செய்யக் காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக்குழுவினர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாததால் சில காலங்களாகவே அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார். அவர் பொதுக்கூட்டங்கள், பிரசாரங்களில் பங்கேற்று நீண்ட காலமாகிறது. அவ்வப்போது தன் உடல் நிலை பாதிப்புகளால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி. இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிக மோசமானதாக உள்ளது என்று தகவல் வெளியானதையடுத்து ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள், கமல் மற்றும் பல அரசியல் சார்ந்த தலைவர்கள் நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வருகை தந்தனர். இந்நிலையில், அவருக்கு இருக்கும் சிறுநீரகத் தொற்று நோயால் ஏற்பட்ட காய்ச்சலின் காரணமாக நேற்று உடல்நிலை மிகவும் மோசமானதாகத் தகவல்கள் வெளியாகின. அவர் வீட்டிலேயே இரண்டு மருத்துவர்கள் தங்கி சிகிச்சையளித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages