சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலைக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி கிராம மக்கள் கால்நடைகளுடன் ஊரை விட்டு வெளியேறி, பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் தஞ்ச மடைந்தனர். கால்நடைகள் மேல் கருப்பு துணி கட்டியும், 8 வழிச்சாலை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவிலில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதே போன்று திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment