மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் 80 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை⚠ விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் இரவு பத்து மணி அளவில் 120 புள்ளி 37 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரத்து 935 கன அடி வீதம் தண்ணீர் வரத் தொடங்கியது. வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்த நிலையில், சுரங்கம் வழியாக வினாடிக்கு 25,000 கன அடி வீதமும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 55,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை-வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி வீதம் நீர் வெளியேற்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment