உலக கால்பந்து-  ரஷ்யா வெல்லுமா - Agnipuratchi

உலக கால்பந்து-  ரஷ்யா வெல்லுமா

Share This

உலக கால்பந்துப் போட்டியில் வலிமை வாய்ந்த ஸ்பெயின் மற்றும் ரஷ்ய அணிகள் இன்று மோதுகின்றன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில், 2வது சுற்று போட்டி நேற்று தொடங்கியது. முதல் ஆடடத்தில் அர்ஜெண்டினா அணியை பிரான்ஸ் வெளியேற்றியது. போர்ச்சுக்கல் அணியை தோற்கடித்து உருகுவே அணி காலிறுதிக்குள் நுழைந்தது. இதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இன்றிரவு நடைபெறும் ஆட்டம் ஒன்றில்  ஸ்பெயின் மற்றும் ரஷ்ய அணிகள் மோதுகின்றன. 2016 ஆம் ஆண்டு யூரோ உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் ஒரு ஆட்டத்தில்கூட தோல்வி அடையாமல் ஸ்பெயின் அணி வலம் வருகிறது. டிகோ கோஸ்டா, இஸ்கோ, இகோ அஸ்பஸ் போன்ற திறமை மிக்க வீரர்களுடன் ரஷ்ய அணிக்கு நெருக்கடி கொடுக்க ஸ்பெயின் அணி தயாராகி வருகிறது. அதேநேரத்தில் நடுகள வீரர் ஆலன் சகோவ் காயம் குணம் அடைந்து மீண்டும் திரும்பியிருப்பது ரஷ்ய அணியினரை உற்சாகம் அடைய செய்துள்ளது. மேலும் டெனி செரிஷேவ், ஆர்டெம் சூபா, கொலோவின் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வருகின்றனர். இதேபோல் இரவு பதினொன்றரை மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உலகக்கோப்பையை இதுவரை வெல்லாத குரோஷியாவும் டென்மார்க்கும் மோதுகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages