வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே மாவீரன் ஜெ.குருவின் திரு உருவப்படத்திற்கு பா.ம.க.வினர் மற்றும் திரளான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். - Agnipuratchi

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே மாவீரன் ஜெ.குருவின் திரு உருவப்படத்திற்கு பா.ம.க.வினர் மற்றும் திரளான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Share This

மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், பா.ம.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.குருவின் திரு உருவப்படம் திறப்பு விழா மற்றும் நினை வேந்தல் நிகழ்ச்சி வாலாஜா அருகில் உள்ள மோட்டூரில் நடைபெற்றது. அப்போது ஜெ.குருவின் உருவப்படத்தை திறந்து வைத்த பா.ம.க.வினர், இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, பின்னர் வீர வணக்கம் முழக்கமிட்டனர்.

இதில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் சரவணன், இளவழகன், மாநில துணைத் தலைவர்கள் முரளி, நடராஜன், மாவட்ட செயலாளர் கரிகாலன், மாநில அமைப்பு துணை செயலாளர், தங்கதுரை, மாவட்டத் தலைவர் ஆறுமுகம் முதலியார், மற்றும் கட்சி நிர்வாகிகள் மகேந்திரன், இளங்கோ, மோகன், வேலு உள்ளிட்ட பா.ம.க.வினரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages