மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிதாக எட்டு வழி சாலைத் திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் முனைப்பு காட்டுவதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  குற்றம்சாட்டியுள்ளார்.  - Agnipuratchi

மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிதாக எட்டு வழி சாலைத் திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் முனைப்பு காட்டுவதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  குற்றம்சாட்டியுள்ளார். 

Share This

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எட்டு வழி சாலைக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் கொடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அப்பட்டமாக பொய் கூறி வருவதாக குற்றம் சாட்டினார். அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்டதில் எந்த விவசாயியும் இத்திட்டத்திற்கு நிலம் கொடுக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது என்றார். முதலமைச்சருக்கு  நெருங்கியவர்களின் தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் பகுதிகள் பாதிக்காத வகையில் இந்த சாலை அமைவது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய விதி முறைப்படி ஒரு வீட்டிற்கு 2 லட்சம் ரூபாய் வரைதான் நிவாரணம் கிடைக்கும் என்று கூறிய அவர், ஆனால் விவசாயிகளை ஏமாற்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அதிகாரிகள் கூறி வருவதாக குற்றம் சாட்டினார்.

மேட்டூர் உபரி நீரை சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கை என்று கூறிய அவர், சட்டப்பேரவையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற உறுதி அளிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். இதே போல கொளத்தூர் அருகே தோனிமடுவு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மக்களின் கோரிக்கையையும் அவர் சுட்டிக்காட்டினார்.  மக்களின் நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றாமல் எட்டு வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமி முனைப்பு காட்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

மணல் கொள்ளை அடிப்பதற்காகவே மேடடூர் அணை தாமதமாக திறக்கப் படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். எஸ்.பி.கே. நிறுவனத்தில் நடைபெற்ற ஊழலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தொடர்புள்ளது. எனவே இது குறித்து நடுவண் புலனாய்வுத்துறை விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கூறிய அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். நேர்காணலின் போது மாநில துணை பொதுச்செயலாளர்கள் அருள், குணசேகரன், துணைத் தலைவர் கார்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages