தேனி - முல்லைப்பெரியாரில் ஆய்வு - Agnipuratchi

தேனி - முல்லைப்பெரியாரில் ஆய்வு

Share This

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியதை அடுத்து,  துணை கண்காணிப்புக்குழுவினர் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.

தென்மேற்குப் பருவமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டியதையடுத்து, துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு நடத்தினர். முதன்மை அணை, பேபி அணை, மதகுப்பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மழைப்பதிவு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று மாலை குமுளியிலுள்ள கண்காணிப்புக்குழு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன் பின்னர் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், மூவர் கண்காணிப்புக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages