சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சரக்குந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள எட்டுவழிச் சாலையால் யாருக்கும் பயனில்லை என்றனர். நான்கு வழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் முறைகேடாக 6 வழிச்சாலைக்கான கட்டணம் வசூலிக்கப் படுவதை சரி செய்யாமல், தனியார் நிறுனத்திற்காக எட்டுவழிச்சாலை அமைக்கப் படுவதாக குற்றம்சாட்டினர். அதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றினால், டீசல் செலவு மற்றும் பயண நேரம் குறையும் என்றும் சரக்குந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மகாராஷ்ட்ராவில் நடுவணமைச்சர் நிதின் கட்கரியின் நிறுவனத்தினர் சுங்கசாவடிகளில் முறைகேட்டில் ஈடுபடுவதை போல, தமிழக சுங்கசாவடிகளிலும் முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டினர். விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அரசிடம் பலமுறை இந்த கோரிக்கை குறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதனை வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் சரக்குந்து உரிமையாளர்கள் கூறினர்.
No comments:
Post a Comment