கிறிஷ்டி  குமாரசாமிடம் விசாரணை - Agnipuratchi

கிறிஷ்டி  குமாரசாமிடம் விசாரணை

Share This

சத்துணவு திட்டத்திற்காக முட்டை வழங்கும் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்க பலகோடி ரூபாய்  தரகுத் தொகை கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை, பருப்பு உள்ளிட்டவை வழங்கிவரும் கிறிஷ்டி பிரைடுகிராம் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 75 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வில் போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிகளில் கடன்பெற்று மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பல முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே, மத்தியபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கிறிஷ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி சென்னை அழைத்துவரப்பட்டு அவரிடம் வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சத்துணவு திட்டத்திற்கு முட்டை, பருப்பு உள்ளிட்டவை வழங்கும் ஒப்பந்தத்திற்கு அனுமதி பெற, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 120 கோடி ரூபாய் தரகுத் தொகையாக வழங்கப்பட்டது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சத்துணவு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகளின் இந்த ஆய்வு மற்றும் விசாரணையால்  எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages