திருவண்ணாமலையில், எட்டுவழி சாலைக்கு எதிரான அரசாணை நகலை எரித்த விவசாயிகளை தரதரவென இழுத்துச்சென்று கைதுசெய்தனர் காவல்துறையினர் . - Agnipuratchi

திருவண்ணாமலையில், எட்டுவழி சாலைக்கு எதிரான அரசாணை நகலை எரித்த விவசாயிகளை தரதரவென இழுத்துச்சென்று கைதுசெய்தனர் காவல்துறையினர் .

Share This

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாத அதிகாரிகள், காவல்துறையின் உதவியுடன் அளவீட்டுப் பணிகளை தீவிரப்படுத் தியுள்ளனர். இதனால் கொதிப்படைந்த திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுப்பதற்கான அரசாணை நகலை எரித்ததால் பரபரப்பு நிலவியது.

அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் இழுத்துச்சென்று கைதுசெய்தனர். இதனிடையே நில அளவீடு தொடர்பாக சேலம் அயோத்தியாபட்டணத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கருப்புப்பட்டை அணிந்து பங்கேற்றனர். பாரம்பரிய சொத்துக்களை அழித்து போடப்படும் எட்டுவழிச் சாலை தங்களுக்கு தேவையில்லை என்றனர்.

இதனிடையே, எட்டுவழிச் சாலைக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில், வரும் 12ஆம் தேதிக்குள் நடுவண் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages