இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழத்தில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளரும் காவல்துறை இயக்குநரும் தாக்கல் செய் த புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 95 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தண்டனை பெறாமல் தப்பியது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பதிவு செய்யப்பட்ட 11 ஆயிர த்து 625 வழக்குகளில் 257 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரி வித்துள்ளார். ஆயிரத்து 244 வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் நேரடியாகவும், ஆயிரத்து 961 பேர் வேறு காரணங்களுக்காவும் விடுவிக்கப்பட்டதாக கூறியுள் ளார். 2017-ஆம் ஆண்டில் பதிவான பத்தாயிரத்து 677 வழக்குகளில் 121 பேரும், நடப்பாண்டில் மூவாயிரத்து 624 குற்றங்களில் 23 பேரும் தண்டனை பெற்றுள்ளதாக மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். மகளிருக்கு எதிரான குற்றங்களை செய்தவர்களை தண்டிக்க அரசு தவறி விட்டதையே இது காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2016, 2017 ஆம் ஆண்டுகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், நான்காயிரத்து 604 வழக்குகளில் விசாரணையே இன்னும் நடைபெறவில்லை என்றும் மருத்துவர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயிரத்து 2 வழக்குகளில் இரண்டரை ஆண்டு களுக்கு மேலாகியும், இரண்டாயிரத்து 184 வழக்குகளில் ஒன்றரை ஆண்டு களுக்கு மேலாகியும் புலன்விசாரணை முடியாதது கொடுமையானது என்று அவர் தெரிவித்துள்ளார். மகளிருக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க தவறியதன் மூலம், குற்றங்களை ஆட்சியாளர்கள் ஊக்குவிப்பது உறுதியாகியுள்ளதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதல மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது கூற்று தவறானது என்பதை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளி விவரங்களே நிரூபித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இத்தகைய இழிநிலை க்கு தமிழகத்தை தள்ளியவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில், கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி விசாரணையை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தேவைப்பட்டால் கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை அமைக்குமாறு யோசனை தெரிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ், மகளிருக்கு எதிரான அனைத்துக் குற்றங்களையும் மகளிர் காவல்நிலையங்கள் விசாரிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மகளிர் காவல் நிலையங்களை வலுப்படுத்துதல், கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், அதிக எண்ணிக்கையில் புதிய காவல் நிலையங்களைத் திறத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கென தனிப்பிரிவை மகளிர் கூடுதல் டிஜிபி தலைமையில் தொடங்குமாறு தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment