மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த தனியார் விடுதி வார்டன் தலைமறைவு - Agnipuratchi

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த தனியார் விடுதி வார்டன் தலைமறைவு

Share This

பேராசிரியர் நிர்மலா தேவி போல கோவையில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ள மற்றுமொரு பெண்கள் விடுதி வார்டன் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் புனிதா என்பவர் காப்பாளராக உள்ளார். விடுதியில் தங்கியுள்ள மாணவி சிலரை பிறந்தநாள் பார்ட்டி என்று கூறி ⭐நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்ற புனிதா, மாணவிகளை மது அருந்த வற்புத்தியுள்ளார். மேலும் விடுதி உரிமையாளர் ஜெகநாதனுடன் செல்போன் வாட்ஸ் ஆஃப் வீடியோ அழைப்பில் பேசும் படி கூறி இருக்கிறார். பெரும்பாலும் மது போதையில் இருக்கும் புனிதா பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் மாணவிகள் பெற்றோர்களுக்கு இது குறித்து தெரிவிக்க பெற்றோர்களும் உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் பயந்து போன விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி காப்பாளர் புனிதா தலைமறைவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages