நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் ஐந்தாவது நாளாக நீடிப்பதால், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி'க்குள் கொண்டு வரவேண்டும், சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து, தமிழகத்தில் மட்டும் சுமார் நான்கரை லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை. இது குறித்து, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறியுள்ளதாவது, "கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு வரும் லாரிகள் மாற்றுப்பாதையில் வரவழைப்பதால், லாரிகளுக்கு கூடுதல் வாடகை தர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கோயம்பேடு சந்தைக்கு பூக்களும் தாமதமாக கொண்டு வரப்படுகின்றன. இதனால், காய்கறி, பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
ஐந்தாவது நாளாக நீடிக்கும் லாரிகள் வேலை நிறுத்தம் பல்லாயிரம் கோடி பொருட்கள் தேக்கம்
ஐந்தாவது நாளாக நீடிக்கும் லாரிகள் வேலை நிறுத்தம் பல்லாயிரம் கோடி பொருட்கள் தேக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment