ஹெல்மெட், சீட் பெல்ட் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - Agnipuratchi

ஹெல்மெட், சீட் பெல்ட் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Share This

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது காவல்துறையினர் இந்த சட்டத்தை முதலில் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இரண்டு சக்கர வாகனங்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படுவதால் இரவு நேரங்களில் பிற வாகன ஓட்டுனர்களுக்கு அது பாதகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அந்த விளக்குகளை பொருத்த, கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவது ஆகியவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அவ்வப்போது முறையான வாகன சோதனை நடத்தவும், அது குறித்த அறிக்கையை வரும் 27ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள் அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages