ஸ்ரீபெரம்பத்தூரில் தொழிற்சாலை-பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் - Agnipuratchi

ஸ்ரீபெரம்பத்தூரில் தொழிற்சாலை-பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Share This

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த தொழிற்சாலையை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கையெழுத்திடப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் நேரடியாக ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 3 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சியட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிட வேண்டியவை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages