லோக் ஆயுக்தா மசோதா-சட்டப்பேரவையில் நாளை தாக்கல். - Agnipuratchi

லோக் ஆயுக்தா மசோதா-சட்டப்பேரவையில் நாளை தாக்கல்.

Share This

லோக் ஆயுக்தா மசோதாவை ஜூலை 5ம் தேதி (நாளை) மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், நாளை சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த மசோதா, சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான 9ம் தேதியன்று விவாதத்தின் மூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages