ஓபிஎஸ் குடும்பம் மீது சொத்துக்குவிப்பு புகார் - Agnipuratchi

ஓபிஎஸ் குடும்பம் மீது சொத்துக்குவிப்பு புகார்

Share This

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையிடம், திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். இந்த புகார் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 மாதங்களாக ஏன் விசாரணை நடத்தப்படவில்லை⁉ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக விளக்கம் அளித்த தமிழக அரசு, முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதோடு, லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை எனில், மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுக அனுமதியளித்தது. இந்நிலையில் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages