ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக கைது⛓ செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிராகவன் மீது 90க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில்⛓ அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது அனைத்து வழக்குகளிலும் அவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த 24ஆம் தேதி ஜாமின் வழங்கியதோடு வேறெந்த வழக்கிலும் அவரை கைது செய்யக்கூடாது என்று கூறியிருந்தது. இந்நிலையில், அவரை ஜாமீனில் வெளியில் கொண்டு வருவதற்காக வழக்கறிஞர்கள் சென்ற போது, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து விட்டதாக சிறை⛓ நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து, ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு அதற்கான விசாரணையும் இன்று நடந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதிகள், புதிய வழக்குகளில் ஹரிராகவனை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது எப்படி என்று கண்டித்தனர். இது ஜனநாயக நாடா போலீஸ் நாடா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இது ஜனநாயக நாடா போலீஸ் நாடா- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேல்வி?
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment