பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் ‘யுனிடெக்’ ஆகும். இந்த கட்டுமான நிறுவனத்தில் வீடு வாங்குவதற்கு பணம் செலுத்தியவர்களுக்கு, வாக்குறுதிப்படி வீடுகள் கட்டி தரப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்த கட்டுமான நிறுவனத்தார் தங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆக்ரா, வாரணாசி ஆகிய நகரங்களில் வில்லங்கம் இல்லாத 600 ஏக்கருக்கும் மேற்பட்ட சொத்துகள் இருப்பதாக பட்டியல் அளித்தனர். இதனை விற்று வீடு வாங்க பணம் செலுத்தியவர்களுக்கு திருப்பித்தர 3 பேர் கொண்ட குழுவினை உச்சநீதிமன்றம் ஏற்கனவே அமைத்திருந்தது.
இந்நிலையில் நேற்று இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, யுனிடெக் நிறுவனத்தாரின் ஆக்ரா சொத்துகளை 4 வாரத்திலும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாரணாசி சொத்துகளை 6 வாரத்திலும் ஏலத்தில் விற்று முடிக்க எஸ்.என். டிங்கரா குழுவுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
யுனிடெக்' கட்டுமான நிறுவன சொத்துகளை விற்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment