அவசரமாக கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம் - Agnipuratchi

அவசரமாக கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம்

Share This

கருணாநிதி மரணம் அடைந்ததால் தி.மு.க.வின் அடுத்த புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பொதுச்செயலாளர் அன்பழகன், கட்சியின் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், "திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தின் போது, கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது மற்றும் கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண்டும் சேர்ப்பது குறித்தும் பேசப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages