ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் - Agnipuratchi

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்

Share This

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பாலேம்பேங் நகரில் நடைப்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டி நேற்று நடைப்பெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தருண் அய்யாசாமி 48.96 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே போல், ல்வேறு தடைகளுடன் கூடைய ஸ்டீபிள்சேஸ் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் 9.40.03 நிமிடங்களில் ஓடி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதனை தொடர்ந்து, பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு 6.51 மீட்டர் நீளம் தாண்டிய நீனா இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages