உள்ளாட்சித்துறை ஆய்வுக்கூட்டம் குறித்து முதல்வர் ஆலோசனை - Agnipuratchi

உள்ளாட்சித்துறை ஆய்வுக்கூட்டம் குறித்து முதல்வர் ஆலோசனை

Share This

சென்னை தலைமை செயலகத்தில் உள்ளாட்சித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதன்மை செயலாளர் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் ஊரக மற்றும் நகர்ப்புறங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து நடத்தப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகள் பற்றி முதலமைச்சர் கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages