சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடனுக்கு 1 மணி நேரத்திற்குள் ஒப்புதல் -மத்திய அரசு - Agnipuratchi

சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடனுக்கு 1 மணி நேரத்திற்குள் ஒப்புதல் -மத்திய அரசு

Share This

பொதுத்துறை வங்கிகளின் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, சிறு தொழில் வளர்ச்சி வங்கி மற்றும் 5 பொதுத்துறை வங்கிகளை இணைத்துwww.psbloansin59minutes.com என்ற இணைய தளத்தை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த இணையதளம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் ஒப்புதல் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் 7 அல்லது 8 பணி நாட்களுக்குள் கடன் தொகை உரியவருக்கு கிடைத்துவிடும் என்றும் நிதியமைச்சகம் உறுதியளித்துள்ளது. மேலும் வங்கிகளின் உள்கட்டமைப்பு, சேவைகள், ஏடிஎம் வசதிகள், வங்கிக் கிளைகள், வங்கிகளின் விதிமுறைகள் உள்பட பல்வேறு விவரங்களுக்கான ஜன் தன் தர்ஷக் என்ற இணைய தளமும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages