பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் - Agnipuratchi

பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்

Share This

பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதையடுத்து வரும் 10ம் தேதி நாடு தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது, "அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை நோக்கி செல்வதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட வேண்டும். விலையேற்றத்தால் மக்களின் பிரச்னையை உணர்கிறோம். பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட்ட பின்னர் அனைவரும் பயனடைவார்கள். கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக ஈரான், வெனிசுலா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் கூறியபோதும் அதை அவர்கள் செய்யவில்லை. இது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages