சென்னை-சேலம் இடையே அமையவுள்ள 8 வழி சாலை திட்டத்திற்கு நிலத்தின் அளவீடு எடுத்து கொண்டிருக்கையிலேயே ஏராளமான மரங்களை வெட்டியுள்ளார்கள். இது குறித்து, புகார் எழுந்துள்ளதையடுத்து, ஏன் ஒரு மரத்தை வெட்ட அனுமதி வாங்கிவிட்டு ஏராளமான மரங்களை வெட்டியுள்ளீா்கள்⁉. மரங்களை கள்ளத்தனமாக வெட்டுவதால் ஏன் இத்திட்டத்திற்கு தடை விதிக்கக் கூடாது⁉ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மரங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால் ஒட்டுமொத்த திட்டத்திற்கும் தடை விதிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனா். தொடா்ந்து நடைபெற்ற வாதத்தின் போது, அரசு அதிகாாிகளின் நிலங்களை கையகப்படுத்தினால் தான் ஏழை மக்களின் நிலைமை உங்களுக்கு புரியும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, நில அளவீடு தொடா்பான ஆவணங்கள் மற்றும் மரங்களை வெட்டும் பணிகள் எந்த அளவில் உள்ளது என்று தமிழக அரசு பதில் அளிக்குமாறு உயா்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.
8 வழி சாலைக்கு தடை விதிக்க நேரிடும் - சென்னை உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment