குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. குட்கா முறைகேடு நடந்த காலகட்டத்தில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மன்னர் மன்னன் தற்போது மதுரை ரயில்வே டி.எஸ்.பி.யாகவும், சம்பத் குமார் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளராகவும் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ முதல்முறையாக காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதால் வழக்கில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
குட்கா விவகாரம்-டிஎஸ்பி மற்றும் ஆய்வாளருக்கு சிபிஐ சம்மன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment