8 வழிச்சாலை திட்டம்-மண் பரிசோதனை பணிகள் நிறுத்தம் - Agnipuratchi

8 வழிச்சாலை திட்டம்-மண் பரிசோதனை பணிகள் நிறுத்தம்

Share This

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதோடு, சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை 8 வழிச்சாலைக்கான பணிகள் நடைபெறாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் அதனை மீறி தற்போது சேலம் மாவட்டம் அருகே ஜருகுமலையில் 20 அடி உயரத்தில் மண் பரிசோதனை என்ற பெயரில் மலையை துளையிடும் பணி ஒருவாரமாக நடைபெற்று வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள் தடையை மீறி பணிகள் நடைபெறுவது பற்றி நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தெரிவித்தனர். இந்த செய்தி ஊடகத்தில் ஒளிபரப்பானதையடுத்து, மண் பரிசோதனை செய்யும் பணியை அரசு அதிகாரிகள் தற்போது நிறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages