பாரத் பந்த்- டெல்லி ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி - Agnipuratchi

பாரத் பந்த்- டெல்லி ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி

Share This

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை கண்டித்து இன்று நாடு முழுவதும் 'பாரத் பந்த்' என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ராஜ்காட் அருகே காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிரிக்கட்சினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, சரத்யாதவ், சரத் பவார், திமுக சார்பில் டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். பின்பு ராஜ்கட்டில் இருந்து ராம்லீலா மைதானம் நோக்கி பேரணி நடத்தி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி முழக்கமிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages