ஸ்டர்லைட் ஆலை ஆய்வு குழுவிற்கு தடை விதிக்கமுடியாது-உச்சநீதிமன்றம் - Agnipuratchi

ஸ்டர்லைட் ஆலை ஆய்வு குழுவிற்கு தடை விதிக்கமுடியாது-உச்சநீதிமன்றம்

Share This

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. அரசின் இந்த ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்ய ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் பசுமை தீர்ப்பாயம் குழு நியமித்தது. தற்போது, பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages