இரட்டை இலை சின்ன விவகாரம்-சிறப்பு அமர்வுக்கு மாற்றம் - Agnipuratchi

இரட்டை இலை சின்ன விவகாரம்-சிறப்பு அமர்வுக்கு மாற்றம்

Share This

இரட்டை இல்லை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு நீதிபதி அரவிந்த்குமார் அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் இன்று முதல் விசாரிப்பார் என பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது⛓ செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின்பு சுகேஷ் சந்திரசேகரை தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages