பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கர்நாடக அரசு கூறிவருகிறது. ஆனால் இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறையும் என தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு தன்னிச்சையாக விண்ணப்பித்துள்ளது மற்றும் கர்நாடக அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை மீறும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கர்நாடக அரசின் நடவடிக்கை, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று அவர் கூறிஉள்ளார்.
No comments:
Post a Comment