பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி - Agnipuratchi

பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி

Share This

கர்நாடகாவில் கடந்த மாதம் கடும் மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு கடும் சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தை சரிசெய்ய உள்துறை மந்திரியிடம் ஏற்கனவே நிதியுதவி கேட்டு கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்து இருந்தார். ஆய்வுக்குழுவின் முடிவை பொருத்து எவ்வளவு நிதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அவர் பதிலளித்திருந்தார். இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்தார். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages