இந்தியாவில் ஓரினச்சேர்க்கை உறவு குற்றமல்ல - உச்சநீதிமன்றம் - Agnipuratchi

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை உறவு குற்றமல்ல - உச்சநீதிமன்றம்

Share This

இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் ஓரினச்சோ்க்கை அங்கீகரிக்கப்படாததால், அவை தற்போது வரை குற்றச் செயலாகவே கருதப்படுகிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு ஓரினச் சோ்க்கை குற்றச்செயல் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்க முடியும். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஓரினசேர்க்கை ஆதரவாளர்களை மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், ஓரினச்சேர்க்கை உறவை குற்றம் என வரையறுக்கும் சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்து, ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், இந்தத் தீர்ப்பை மறுபரீசிலனை அல்லது திருத்தம் செய்யலாமே தவிர, மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages